Wednesday 12 June 2013

Nava Bhashaanam

நவ பாஷாணம் என்பது என்ன?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1. .சாதிலிங்கம்.
2 .மனோசிலை
3 .காந்தம்
4 .காரம்
5 .கந்தகம்
6 .பூரம்
7 .வெள்ளை பாஷாணம்
8 .கௌரி பாஷாணம்
9 .தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் /சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

Hit LIKE & SHARE நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science

via மெய்ப்பொருள்

No comments:

Post a Comment